cinema news
சிம்பிள் ஸ்டெப்பா போட்ட சின்ன குஷ்பூ…இப்படி சிதற விட்டுடாங்களே 2கே கிட்ஸ்?…
மும்பை தொழிலதிபர் பிரதீப் மோத்வானி- மருத்துவர் மோனா மோட்வானி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த “மாப்பிள்ளை” படத்தில் தான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொலைக்காட்சி நடிகையாக தனது கேரியரை துவங்கிய ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை மெதுமெதுவாக துவக்கினார்.
“எங்கேயும் காதல்” படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத்துவங்கியது. இவரின் துருதுரு நடிப்பால் தமிழ் ரசிகர்கள் இவரை சின்ன குஷ்பூ என அழைக்கத்துவங்கினர்.
ஒரு கட்டத்தில் விஜய்க்கு ஜோடியாக கூட நடித்தார். “வேலாயுதம்” படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இவரை பார்க்கவே தனியாக ஒரு கூட்டம் திரையரங்கத்திற்கு கிளம்பியது அப்போது.
சிவகார்த்திகேயனுடன் “மான் கராத்தே”, சுந்தர்.சி இயக்கி நடித்த “அரண்மனை” படத்திலும் நடித்திருந்தார். இப்படி பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவரை புகழின் உச்சிக்கே எடுத்து சென்ற படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. உதயநிதி, சந்தானத்தில் அல்ட்ரா காமெடி நடிப்பில் பட கலகலப்பானதாக இருந்தது.
இதில் கதாநாயகியாக நடித்த ஹன்சிகா அதிகமானோரால் ரசிக்கப்பட்டார். “கார்டியன்” படம் இந்தாண்டு துவக்கத்தில் வெளியானது. ஆனால் அது இவருக்கு எதிர்பார்த்தது போல அமையவில்லை.
சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது சில நாள். அதன் பின்னர் பிரபு தேவாவுடன் ஃப்ரண்ட்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.
நல்ல வாய்ப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கும் இவர் நடனமாடிய வீடியோ ஒன்று இப்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏதும் படத்திற்காக அவர் ஆடியிருந்தாரா என்பது விரைவில் தெரிய வரும்.