cinema news
தென் இந்திய சினிமாதான் பெஸ்ட்- ஹன்சிகா மோத்வானி
பிரபலமான தமிழ் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி . இவர் சமீப காலமாக இவர் அதிகம் தமிழ் படங்களில் நடிப்பதில்லை வாய்ப்பு இவருக்கு வெகுவாக குறைந்துவிட்டது.
இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
தென்னிந்திய சினிமா என்னை நல்ல முறையில் வரவேற்று, நான் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தை எனக்கு அளித்திருக்கிறது என நினைக்கிறேன். அங்கே பார்வையாளர்கள் எப்போதும் எனக்கு ஒரு தனி இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.நான் அங்கு ஒரே மாதிரியான கதாபாத்திரத்துக்குள் சுருங்கவில்லை. தெனிந்திய திரைப்படங்களில் எனக்கு பல்வேறு புதிய கதாபாத்திரங்கள் கிடைத்தன” என்றார்.
இந்தி திரையுலகில் இருந்து விலகி, அதிக தமிழ்ப் படங்களில் நடிப்பது உங்கள் மனப்பூர்வமான முடிவா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா ”எல்லா வகையான படங்களிலும் நடிக்கவே நான் விரும்புகிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமா கதைகளில் நல்ல கதைகள் கொண்ட ஸ்கிரிப்ட்கள் என்னை தேடிவருவதாக உணர்கிறேன். நீங்கள் கூறுவது போல அல்ல. நான் ஒரு என்டர்டெயினர். எங்கு, எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிப்பேன். என்னை சுற்றி எப்போதும் தடுப்பு வேலிகளை அமைத்துக்கொள்வதில்லை” என்றார்.