ஜி.எஸ்.டி வரியை நீக்குங்கள் நடிகை நிலாவின் கோபம்

ஜி.எஸ்.டி வரியை நீக்குங்கள் நடிகை நிலாவின் கோபம்

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. பல நகரங்களில் இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி மரணங்களை ஏற்படுத்தி எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் அ ஆ படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் ஜோடியாக நடித்த நிலா அவரது உறவினர்கள் பலரை கொரோனாவில் இழந்துவிட்டாராம். இன்றும் கூட ஒரு உறவினர் இறந்துவிட்டாராம் இதனால் கடும் வருத்தத்தில் உள்ளார் இவர்.

முதலில் ஜி.எஸ்.டியை நீக்குங்கள் மருத்துவமனையில் பெட் கிடைக்காமலும் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் வாழ முடியாமல் இருக்க நான் எதற்கு 10 சதவீத ஜி.எஸ்.டியை கட்ட வேண்டும் அதை நீக்க வேண்டும் என உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பிரதமரை டேக் செய்துள்ளார் இவர்.