cinema news
ரஜினியே பாத்துக்குவாரு நீ வேண்டாம்…செந்திலை கடுப்பேத்திய கவுண்டமணி…
நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். கவுண்டமணி என்றால் கவுண்டர், நக்கல், நையாண்டி. ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த இவர் பின்னர் செந்திலுடன் இணைந்தார்.
கவுண்டமணியின் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியவர் நடிகர் செந்தில், இவர்கள் இருவரும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் கவுண்டமணி செந்தில் பெயர்கள் படத்தில் இடம் பெற்றாலே, அந்த படம் வெற்றி அடையும் என்று கணிக்கப்பட்டது.
‘விஷயம்’ இல்லாத படங்களை கூட இவர்கள் இருவரின் காமெடி தூக்கி நிறுத்திய வரலாறும் உண்டு. சினிமாவில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் இருவரும் நல்ல நண்பர்களே. செந்தில் தன் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் பொழுது கவுண்டமணியிடம் கலந்து கொள்வாராம்.
கவுண்டமணி கொடுக்கும் ஆலோசனைகளையும் பின் தொடருவாராம். செந்திலை அடிக்கடி நேரில் சந்த்திது பேசும் பழக்கத்தை கொண்டிருந்தாராம் இவர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் சந்தித்து கொள்வார்களாம்.
இப்படி இருக்கையில் ரஜினியுடன் “வீரா” படத்தில் செந்தில் நடித்து வந்திருக்கிறார். அப்பொழுது திடீரென செந்திலை தொலைபேசியில் அழைத்த கவுண்டமணி எங்கே இருக்கிறாய் என்று கேட்டாராம்.
“வீரா” படப்பிடிப்பு நடந்தது கவுண்டமணி வீட்டின் அருகே என்பதால் நான் சூட்டிங்கில் இருக்கிறேன் என்று செந்தில் சொன்னாராம். படத்தின் ஹீரோ யார்? என்று கவுண்டமணி கேட்க, ரஜினிகாந்துடன் “வீரா”படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன் என சொன்னாராம்,
அவர் நடிக்கிறார் என்றால் நீ எதற்கு, அவரே காமெடி எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி செந்திலை கலாய்த்து தள்ளினாராம். இந்த விஷயத்தை ரஜினிகாந்த் ஒரு மேடையில் பேசிய போது பகிர்ந்திருந்தார்.