cinema news
காலையில என்ன டிபன் சாப்பிடீங்க?…தனக்கு வந்த கேள்வியையே பதிலாக சொல்லி கோல் போட்ட கவுண்டமணி!…
சத்யராஜ், கவுண்டமணி இவர்கள் இருவரின் நகைச்சுவையை யாரும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது தான். நக்கல், நையாண்டி நடிப்பில் இணைந்து நடித்த படங்களில் இருவரும் ஸ்கோர் செய்திருப்பார்கள். இருவரும் பல படங்களில் இணைந்து நடிக்கிருக்கிறார்கள்.
அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக பல படங்கள் இருக்கிறது. இதில் முக்கியமான ஒரு படம் “மாமன் மகள்”. படத்தில் மணிவண்ணனுடன் இவர்கள் இருவரும் சேர்ந்து அடித்த லூட்டியை இன்றும் மறக்க முடியாது.
படத்தில் ஒரு காட்சியில் சத்யராஜ் அழுது முடித்துவிட்டு தனது முகத்தை அப்பாவியை போல மாற்றுவார். இதை பார்த்ததும் கவுண்டமணி இது உலக மகா நடிப்புடா சாமி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி எல்லாரையும் தனித்தனியாத்தான் பாத்திருக்கேன். ஆனா இன்னைக்கு தான்யா ஒட்டு மொத்தமா பாக்கேன் என சொல்வது தான் வசனமாம்.
கவுண்டமணி அப்போது குறுக்கிட்டு சத்யராஜிடம் உங்களை போய் நா எப்படி மொள்ளமாரி, முடிச்சவிக்கின்னுலாம் சொல்றது என வசனத்தை பேச தயக்கம் காட்டினாராம்.
உடனே சத்யராஜ் அண்ணன் நீங்க எனது மறைமுகமா பாராட்டுறீங்க என சொன்னாராம். அதற்கு கவுண்டமணியோ ஓ நீங்க அப்படி வற்ரீங்களா என சொல்லி தான் அந்த காமெடி டயலாக்களை படத்திற்காக பேசி நடித்தாராம்.
கவுண்டமணி பத்திரிக்கையாளர்களை அதிகமாக சந்திக்க மாட்டாராம். ஆனால் ஒரு முறை செய்தியாளர் ஒருவர் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவத்தினை சொல்ல முடியுமா? என கேட்டாராம்.
அதற்கு இவரோ செய்தியாளரை பார்த்து காலை டிபன் என்ன சாப்பிட்டீங்க என கேட்க, செய்தியாளரோ மறந்துவிட்டது என சொன்னாராம். பாருங்க சாப்பிட்டதே மறந்து போச்சு, இப்படி இருக்கும் போது நான் எதுக்கு பழைய சம்பவங்களை நினைக்கனுன்னு சொல்லி கேள்வியையே பதிலாக மாற்றி கோல் போட்டிருக்கிறார். இந்த தகவல்களை சத்யராஜ் சொலியிருந்தார்.