Latest News
இந்தாங்க இந்த கிஃப்ட புடிங்க…இப்போ இது தான் ஃபேஸன்…சூரிக்கு அடித்த பம்பர்?…
காமெடியன் சூரி இப்போ தமிழ் நாட்டுல இப்படி சொன்னா யார் அவர்ன்னு கேக்குற காலம் வந்தாச்சு. ஹீரோ சூரின்னு சொன்னா தான் தெரியும். காமெடியான நெறைய படங்கள், ஆனா ஹீரோவா நச்சுன்னு ரெண்டே ரெண்டு படம் தான். தமிழ் டாப் ஹீரோஸ் லிஸ்ட்ல சூரியும் ஜாயின் பண்ணிட்டாரு.
வெற்றிமாறன் காட்டிய வழி சூரிக்கு வெற்றி தான். “விடுதலை” படத்துல சூரியை ஹீரோவாக்கியது அவர் தானே. அடுத்தது “கருடன்”, படம் சூப்பர் ஹிட்.
சசிகுமார் நடிச்சிருந்தாலும் அது சூரி படமாததான் இருக்குது. மொத்ததில படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் தான். இதுவரை “கருடன்” படம் ஐம்பது கோடி ரூபாய் வரை வசூலிச்சாச்சாம்.
படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்டா மாறியது சூரியோட நடிப்பு தான். யதார்த்தமான நடிப்பால படம் பாத்தவங்களை எல்லாம் கதற வச்சிருப்பாரு. இனி ஹீரோவா நடிச்சாதான் அவர பாப்போம்னு ஆடியன்ஸ் சொல்ற மாதிரி வைச்சிட்டாரு சூரி தன்னோட நடிப்பால “கருடன்” படத்துல.
படத்தயாரிப்பாளர் சூரியோட மேனேஜர் தானே. சூரிக்கு படத்தில நடிக்க பேசிய சம்பளத்தில இரண்டரை கோடி ரூபாய் மட்டும் தான் கொடுத்தாங்களாம். மீதிய சீக்கிரத்தில கொடுத்திருவாங்க. ஆனா படத்தோட புரடியூசர் சூரிக்கு பி.எம்.டபிள்யூ. கார் ஒன்ன வாங்கி கிஃப்டா கொடுத்திருக்காராம்.
நினைச்சதை விட படம் வேற மாதிரி ஹிட் தான். ஸோ தயாரிப்பாளர் செம்ம ஹாப்பியா ஆகிட்டாராம். இந்த தகவலை எல்லாம் சொன்ன விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன். மீதி இருக்குற சம்பள பாக்கிய கொடுத்திடுவாங்களா?,இல்ல அதுக்கு பதிலாத்தான் காரா?ன்னு வேற கேள்வி கேட்டிருக்கார்.