cinema news
கதையை கேட்காமலேயே கம்போசிங்கை முடிச்சு கொடுத்த இளையராஜா!…வெளியான கங்கை அமரனின் சுயநலம்…
இசையமைப்பதில் வல்லவர் இளையராஜா, படங்களை இயக்குவதும், பாடல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கியவர் கங்கை அமரன். இவரும் சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்
இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான “கரகாட்டக்காரன்” தமிழ் சினிமா வரலாற்றில் இன்றும் சொல்லக் கூடிய சாதனைகளை தன் வசம் வைத்துள்ளது இந்த படம்.
கதையைப் பற்றி இளையராஜாவுடன் சொல்லாமல் சிட்டுவேஷனை மட்டுமே சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனரான கங்கை அமரன். அதைக் கேட்டு இளையராஜா உடனே இசையமைத்த பாடல் தான் “மாங்குயிலே பூங்குயிலே”.
அதோடு மட்டுமல்லாமல் காட்சிகளை தெரிந்து மட்டும் கொண்டும் படத்தை பார்க்காமலயே ரீ- ரெக்கார்டிங் செய்து கொடுத்தாராம். இந்த ஆச்சரியமான ஒரு தகவலை சொல்லி இருந்திருக்கிறார் கங்கை அமரன்.
படம் வெளியானதும் அதனை பார்த்த இளையராஜாவோ கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்த காட்சிகளுக்கு அமைந்த பின்னனி இசை கச்சிதமாக பொருந்தியதை பார்த்து ரசித்து சிரித்திருந்திறுக்கிறார்.
தான் இசை அமைத்த படங்களின் முடிவை பற்றியெல்லாம் அதிகம் யோசிக்க மாட்டாராம், அதோடு பட வெற்றி விழாக்களில் பங்கேற்க மாட்டாராம் இளையராஜா.
ஆனால் “கரகாட்டக்காரன்” படத்திற்கு மட்டும் அதன்வெற்றியை கொண்டாட எ எடுக்கப்பட்ட எல்லா விழாக்களிலும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றாராம்.
தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்கு சுற்றுப்பயனமும் மேற்கொண்டாராம். படத்தை அதிக முறை பார்க்கும் ரசிகர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட, ஐந்து பவுன் தங்கச்சங்கிலிகளை வெற்றி பெற்ற நபர்களுக்கு தனது கைகளாலே வழங்கி இருக்கிறார். 100வது நாள், வெள்ளிவிழா கொண்டாட்டங்களிலும் அவர் பங்கேற்றாராம். இளையராஜா தனது வாழ்வில் முதன் முறையாக இப்படி செய்திருந்தாராம்.
இளையராஜாவின் “பயோ – பிக்” படத்தில் இதை காட்சியாக வைக்கசொல்லுவேன், அதனால் தன்னுடய பெயரும் வெளிவரும் எல்லாம் ஒரு சுயநலம் தான் என்றார் கங்கை அமரன்.