cinema news
மொக்கை வாங்கிய முன்னணி ஹீரோக்கள்!…யார் நடிச்சா என்ன கதை நல்லாயிருந்தா தான படம் ஓடும்?…
தமிழ் சினிமாவில் தடுமாற்றத்துடன் துவங்கி இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களும் இருந்துவருகின்றனர். தொடர் வெற்றிகளால் ரசிகர் பட்டாளம் அதிகரித்ததோடு, வருவாய் ரீதியான முன்னேற்றத்தையும் கண்டுள்ளார்கள் இவர்கள்.
முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவர போகிறது என்றாலே அவர்களுடைய ரசிகர்களுக்கு அது திருவிழா தான். ஆனால் எதிர்பார்த்தது போல படம் சரியாக அமையவில்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி வந்ததும் நடந்துள்ளது.
புகழின் உச்சியிலே இருக்கும் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்தது. நெல்சன் இயக்கிய இந்த படம் ‘டோட்டலி வேஸ்ட்’ என சொல்ல வைத்தது. ஹரி இயக்கத்தில் ‘சியான்’விக்ரம் நடித்த “சாமி”படம் சூப்பர் ஹிட். அதே பேரில் வெளிவந்த சாமி – 2 படமோ மிகப்பெரிய சருக்களை சந்தித்தது
அஜித் குமாரை வைத்து “வீரம்”, “விஸ்வாசம்”, “வேதாளம்” என வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்த இயக்குனர் சிவாவோடு கைகோர்த்தார் ரஜினிகாந்த். அதிகப்படியான எதிர்பார்ப்போடு வந்த “அண்ணாத்த” படம் என்னத்த போங்க இப்படி மொக்கையாயிட்டே என சொல்ல வைத்தது ரசிகர்களை.
வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு “பிரின்ஸ்” படம் மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. சந்தோஷ்த்தோடு பார்க்கச்சென்றவர்களை சைலன்ஸாக்கி அனுப்பிவைத்தது “பிரின்ஸ்”
ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆகி, சரிந்திருந்த ரஜினியின் மார்க்கெட்டை நிமிரச் செய்த “சந்திரமுகி”யை காப்பியடித்து சந்திரமுகி – 2 என ராகவா லாரன்ஸ் நடித்து, வெளியான சந்திரமுகி இரண்டு சிரிப்பு காட்டி விட்டு சென்றுவிட்டது.
படன் வந்தும் தெரியாது, போனதும் தெரியாது “வாம்மா, மின்னல்” வசனம் மாதிரியே தியேட்டர்களை விட்டு மறைந்தது சந்திரமுகி – 2.