cinema news
ரீ-ரிலீஸ்லையும் நம்ம தான் ரெக்கார்டு வைக்கணும்!…விஜய்க்கு தூண்டில் போடும் திரையரங்க உரிமையாளர்?…
கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவடைந்து விட்டது 2024 ஆரம்பித்து. இதுவரை பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவில் ரிலீஸ் ஆகவில்லை. வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் துவங்கி உள்ளது. அதிலும் “கில்லி” படம் ரீ-ரிலீஸ் ஆன பிறகு தங்களுடைய பழைய வெற்றி படங்களை எல்லாம் தூசி தட்ட துவங்க விட்டனர் தயாரிப்பாளர்கள்..
“கில்லி” வெளியானதும் குஷியான விஜய் ரசிகர்களை போல, “தீனா” பட ரிலீஸ் அஜித் ரசிகர்களை அமர்க்கள பட வைத்தது. சென்னை கமலா தியேட்டரில் “கில்லி” ரிலீஸ் செய்யப்பட்டது. திரையரங்கினுடைய உரிமையாளர் சமீபத்தில் விஜயை சென்று சந்தித்த புகைப்படத்தினை வலைத்தளத்தில் பரவ விட்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் தான் விஜய் சந்தித்த கதையை அப்போது சொல்லி வருகிறாராம். “கில்லி”யை ரீ-ரிலீஸில் நூறு நாட்கள் தனது தியேட்டரில் எப்படியாவது ஓட்டி விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாம்.
‘நூறாவது நாள்’ விழாவிற்கு விஜயை அழைப்பதற்கும் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறாராம். இப்படி விஜயின் மீது மட்டும் ஏன் இப்படி ஆர்வத்தை காட்டுகிறார். எதற்காக இந்த தூண்டில் எனவும் யோசிக்க வைக்கிறது. “கில்லி” வெற்றியை தொடர்ந்து தமிழில் வரிசையாக காத்திருக்கும் படங்களின் பட்டியலும் வந்திருக்கிறது.
திரையரங்கு உரிமையாளர் பற்றிய செய்தியை சொல்லிய ‘வலைப்பேச்சு’ அந்தணன் தான் இந்த பட்டியலையும் சொல்லியிருக்கிறார். விஜய் நடித்த “வில்லு”, தனுஷ் நடிப்பில் வெளியான “தேவதையை கண்டேன்”, மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “நாயகன்” படமும். அதே போல சூர்யா நடித்த “கஜினி” திரைப்படமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் அந்தணன் சொல்லி உள்ளதார்