cinema news
பால் குடிக்க வந்த இடத்துல பாட்டா?…சிரிப்புக்கே சிரிப்பை வரவழைத்த ரசிகர்!…
விஜய்சேதுபதி நடித்த வெற்றிப்படமான “சேதுபதி” படத்தில் காவல் உயர் அதிகாரியாக நடித்தவர் டி.எஸ்.ஆர்.சீனிவாசன். “பொய்க்கால் குதிரை”, “டைரி” சிவகார்த்திகேயன் நடித்து வெளியான “எங்க வீட்டுப் பிள்ளை” உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர் வெப்-சீரியஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதி நடித்த “சேதுபதி” படத்தில் குற்றம் சாட்டப்பட்ட கதா நாயகன் விஜய் சேதுபதியியை விசாரிக்க வரும் உயர் அதிகாரியாக நடித்திருந்தார். மறைந்த நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரனை போலவே இவர் காமெடி செய்வார் என ரசிகர்களால் சொல்லப்படுகிறவர்.
இவர் நடித்து வரும் படத்தினுடைய படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் ஒரு பகுதி திசையன்விளையில் நடந்து வருகிறது.
ஷூட்டிங் இடைவெளியில் பொழுது போக்குவதற்காக வெளியே சென்றுள்ளார் டி.எஸ்.ஆர்.சீனிவாசன். அந்த பகுதியில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு சென்ற இவரை ரசிகர்கள் சுற்றி வளைத்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் சீனிவாசனின் மீது தனக்கு இருக்கும் அன்பை பாடலை வெளிப்படுத்தியுள்ளார் ரசிகர் ஒருவர். சீனிவாசன் அருகே சென்ற அந்த ரசிகர் சிவாஜி கணேசன் படத்தில் வரும் பாலூட்டி வளர்த்த கிளி, பழம் கொடுத்து பார்த்த கிளி’ பாடலை பாட சீனிவாசன் சிரித்த படியே அதை ரசித்து கேட்டு மகிழ்ந்திருக்கிறார்.
பால் குடிக்க வந்த இடத்தில் பாட்டு பாட வைத்து ரசிகர்களை மகிழ்வித்த சீனிவாசனின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ரசிகர் பாடுவதை சீனிவாசன் அமைதியாக கேட்க அவரை சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டத்தினர் இந்த காட்சியை ரசித்து பார்ப்பது போல அந்த வீடியோ வந்துள்ளது.