cinema news
கிடைத்தது புதையல்!…கொடுத்தது எம்.ஜி.ஆர். அல்லவா!…சம்பவம் செய்த ரசிகர்…
நடிகர் எம்.ஜி.ஆர் என்றால் அவரது ரசிகர்களுக்கு மிகவும் இஷ்டம் தான். வாரி வழங்கிய வள்ளலாக இவர் சினிமா காட்சிகளில் மட்டும் வந்ததில்லை. நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார்.
மதுரையில் “மாட்டுக்கார வேலன்” படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஆண்டிபட்டியை சேர்ந்த அவரது தீவிர ரசிகர் கையில் தனது குழந்தையோடு வந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். உங்கள் குழந்தைக்கு நான் பெயர் சூட்ட வேண்டுமா? என கேட்டிருக்கிறார். இல்லை நாங்கள் ஏற்கனவே பெயர் சூட்டி விட்டோம். நீங்கள் ஆசீர்வாதம் மட்டும் பண்ணுங்கள் அவன் நன்றாக வருவான் என்று சொல்லி இருக்கிறார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். குழந்தையினுடைய பெயர் என்ன? என கேட்டதற்கு, த ரசிகரோ, அவன் பெயர் ‘மலைக்கள்ளன்’ என சொல்ல வியந்து போயிருக்கிறார். எம்.ஜி.ஆர். குழந்தைக்கு ‘கள்ளன்’ என்ற பெயரையா வைப்பீர்கள்? என கேட்டிருக்கிறார். அந்த தீவிர ரசிகர் எம்.ஜி.ஆரிடம் ஒரு சுவாரசிய சம்பவத்தை எல்லோர் முன்னிலையிலும் சொல்லியிருக்கிறார்.
“மலைக்கள்ளன்” படத்தை பார்க்க நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி சென்றார் திரையரங்கிற்கு. படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரசவ வலி வந்ததாம். அதோடு மட்டுமல்லாமல் ‘டூரிங் டாக்கீஸிலேயே’ வைத்து தான் இந்த குழந்தை பிறந்தது. அதானாலே பெயரை ‘மலைக்கள்ளன்’ என வைத்ததார்களாம்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தையை கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் மனமார ஆசீர்வதித்தாராம். அதோடு பெரிய 100 ரூபாய் தாள் ஒன்றினையும் பரிசாக வழங்கியிருக்கிறார். குழந்தையின் தந்தைக்கு தேவையான உதவிகளையும் செய்திருக்கிறாராம்.
எம்.ஜி.ஆர். கைகளால் கிடைக்கப்பட்ட 100ரூபாய் தாளை கிடைப்பதற்கறிய பொக்கிஷமாக பாதுகாத்து வந்த்தாராம் அந்த தீவிர ரசிகர். எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசினை பிரேம் போட்டு பத்திரமாக பாதுகாத்து வந்தாராம்.