cinema news
மொதல்ல உலக நாயகன்…அடுத்தது சூப்பர் ஸ்டார்…ஸ்கெட்ச் போட்டு கலக்கும் ஃபகத் பாசில்.
லோகேஷ் கனகராஜ் இந்த இளம் வயதில் இப்படி ஒரு திறமையா என தமிழ் சினிமா ரசிகர்களை வாயடைக்க வைத்து விட்டார், விஜயுடன் இணைந்த “மாஸ்டர்” படம் வெற்றி, இரண்டாவது முறையாக விஜயுடன் சேர்ந்து “லியோ”.
அதன் பின்னர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய “விக்ரம்” வரலாறு காணாத வெற்றி. இப்போது அடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “கூலி”. இப்படி கலக்கிக்கொண்டு வருகிறார் லோகேஷ்.
“மாமன்னன்” படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றார் ஃபகத் பாசில். இயக்குனர் ஃபாசிலின் மகனான இவர் தமிழ் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். கமல் – லோகேஷ் கூட்டணியில் வந்த “விக்ரம்” படத்தில் நடித்திருந்தார். அதில் அவருக்கென தனியாக ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டார் தனது நடிப்பால்.
![coolie](https://tamilnaduflashnews.com/wp-content/uploads/2024/06/coolie.jpg)
coolie
“கூலி” படத்தின் வேலைகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் படத்தில் ஃபகத் பாசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதி, வடிவேலுவிற்கு நிகராக “மாமன்னன்” படத்தில் பேசப்பட்டவர் இவர். ஆக்ரோஷத்தை காட்ட வேண்டிய இடங்களில் காட்டி, அமைதியாக இருக்க வேண்டிய இடங்களில் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்தவர் ஃபகத்.
இப்போது உள்ள இவரின் மார்க்கெட்டை வைத்து பார்க்கும் போது “கூலி”யில் இவர் இணைவது படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் படத்தின் ப்ரமோவை பற்றி சொல்லவே வேண்டாம். நிச்சயம் எதிர்ப்பார்பது போலவே பிரம்மாண்டமாக தான் இருக்கும் விளம்பரம் சார்ந்த விஷயங்களில்.
உலக நாயகனுடன் வெற்றிக்கூட்டணி அமைத்த ஃபகத் இப்போது சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்துள்ளார் கூலி படத்தின் மூலமாக. இது இவரது கேரியருக்கு சிறப்பான ஒன்றாக அமைந்துவிடும் என்பதே ஃபகத் ரசிகர்களின் நம்பிக்கையாக தான் இருக்கும்.