cinema news
ஒரு பாட்டுக்கு இத்தனை கோடி செலவா?…இருந்தாலும் இது ரொம்ப கொஞ்சம் ஓவர் தானோ ஷங்கர்!…
இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். அவரது படங்கள் என்றாலே அது பெரும் பொருட்செலவில் தான் எடுக்கப்பட்டிருக்கும் என கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அப்படி பிரம்மாண்டத்தைக் காட்டி அந்த காட்சிக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் வல்லவர் இவர்.
ஒரு படத்திற்கு இத்தனை கோடி என ரூபாய் செலவாகும் என கணக்கிட வைத்து அதிர்ச்சி அடைய வைப்பார்கள் சில இயக்குனர்கள். ஆனால் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடிகளை செலவழித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“முதல்வன்” படத்தில் வரும் ‘அழகான ராட்சசியே’ பாடலை எடுப்பதற்கு 2கோடி ரூபாய் செல்வானதாம். “எந்திரன்” முதல் பாகத்தில் வந்த ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை படமாக்க மட்டும் 3 கோடி ரூபாய் செல்வானதாம்.
தமிழில் மட்டும் அல்ல எந்த மொழியில் என் படங்கள் எடுக்கப்பட்டாலும் எனது பிரம்மாண்டம் குறையாது என சொல்வது போலதான் ராம்சரன் நாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் படட்த்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதே போல ரஜினியின் நடிப்பில் வெளிவந்த எந்திரன் 2 படத்தில் வந்திருந்த இந்திரலோகத்து சுந்தரி பாடலுக்கு தான் ஷங்கர் இயக்கியதில் அதிக தொகை செலவிடப்பட்டதாம். 32 கோடி ரூபாய் வரை இதற்கு மட்டும் செலவிடப்பட்டதாம். ஆனால் இந்த படத்தின் வசூல் இந்திய சினிமா உலகத்தில் மிகப்பெரிய சாதனையை செய்திருந்தது.
இவர் பாடல்களுக்கு செலவழித்த கோடிகளை தங்களிடம் கொடுத்தால் இதைக் கொண்டு நாங்கள் ஐந்திலிருந்து பத்து படங்கள் வரை எடுத்து விடுவோம் என நினைக்கத்தான் செய்வார்கள் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் இயக்குனர்.