இசையமைப்பளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இசையால் பிரபலமடைந்த இவர் பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, தரமான படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தும் வருகிறார் தொடரச்சியாக.
நல்ல அழுத்தமான கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் இவர், தனது படங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்துள்ளார். இவர் நடித்த “சலீம்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்” போன்ற படங்கள் நல்ல முடிவுகளை பெற்றுத்தந்தது.

தற்பொழுது இவர் நடித்து வெளிவந்துள்ள படம் “ரோமியோ”.
தமிழ் படங்கள் வெளிவந்தாலே போதும் தனக்கே உரிய பாணியில் விமர்சனத்தை கொடுத்து கோலிவுட்டையே பரபரப்பாக்கி விடுவார் விமர்சகர் ‘ப்ளூ சட்டை’மாறன்.
அவரது ஸ்டைலிலேயே “ரோமியோ”படத்திற்கு விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது விஜய் ஆண்டனிக்கு சற்று நெருடலாகவே இருந்தது போல. “பல நல்ல படங்களை விமர்சித்து கொல்லும் திரு.புளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு, இவங்க சொல்றதையெல்லாம் நம்பி, ‘ரோமியோ’ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல்”.
“தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே “ரோமியோ” ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்” என மாறானின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமா ரசிகர்களே, தரம் தாழ்ந்த விமர்சகரும், விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ‘ரோமியோ’ ரிவியூவை புறக்கணிப்பீர். அலைகடலென திரண்டு ‘ரோமியோ’ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள். இப்படிக்கு தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை என தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாறன்.
இவர்கள் இருவருக்கும் வார்த்தை போர் உருவாகி கோலிவுட்டையே பரபரப்பாக்க, படத்திற்கு இப்படியே இருவரும் நல்ல விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்கள் என நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கியுள்ளனர்.











