சினிமாவில் நடிக்கிற நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் திருமணம் ஆனவர்களா?, அவர்களுக்கு எத்தனனை குழந்தைகள். வாரிசுகளும் திரைக்கு வந்து தங்களை மகிழ்விப்பார்களா? என்றும் எதிர்ப்பார்ப்பார்கள்.
ஆனால் இந்த கலைஞர்களின் கல்வித்தகுதி பற்றி அதிகமான புரிதல் இருந்திருக்குமா என தெரியாது. முன்னனிகளாக இப்போது தமிழ் திரையில் கலக்கி வரும், ரசிகப்பெருமக்களின் அபிமானத்தை பெற்ற கலைஞர்களும் என்ன படித்துள்ளார்கள் என்பது பலரும் அறியாத ஒன்றாகக்கூட இருக்கலாம்.
இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடி வரும் கார்த்தி அமெரிக்காவில் பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவரான சிவகார்த்திகேயன் பொறியியல் பட்டதாரி. கல்லூரி நாட்களிலேயே தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது திறமையை காட்டியவர் இவர். கல்லூரி மேடைகளில் பலகுரல் நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுக்களை பெற்றிருந்தவர்.
“உன்னைப்போல் ஒருவன்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கணேஷ் வெங்கட் ராமனும் இன்ஜினியரிங் படித்தவராம். இதே போல பி.டி.சார் படத்தின் கதா நாயகனும் இசையமைப்பாளருமான ஆதியும் இனஜினியரிங் பட்டம் பெற்றவர் தான். இன்றைய 2கே கிட்ஸ்ன் அபிமான ஹீரோக்களில் முக்கியமானவராக பார்க்கப்படக்கூடியவர் ஹிப்-ஆப் தமிழா ஆதி.
கமல், அஜீத், சூர்யாவை வைத்தும் மற்ற நாயகர்களை வைத்தும் படங்களை இயக்கி அவற்றை வெற்றிப்படங்களாக மாற்றிக்காட்டிய கெளதம் வாசுதேவ் மேனன் பொறியியல் பட்டதாரி தானாம்.
“ஆடுகளம்” படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், “ஆரம்பம்” படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த டாப்ஸி நடிக்க வரும் முன் சாஃப்ட் வேர் இன்ஜினியராக பணிபுரிந்திருக்கிறார்.