Published
3 years agoon
By
Krishஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க கங்கனா ராவத், அரவிந்தசாமி, பூர்ணா ஆகியோர் நடித்துக் கொண்டு இருக்கும் படம் தான் தலைவி.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக தலைவி என்ற பெயரில் படமாக தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிக பிஸியாக வலம் வந்தார். இரு மாநில முதல்வர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து ஆந்திர முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர் போலவே அந்திரத்தில் மிக பிரபலம். ஆகவே, என்.டி.ராமராவ் கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்துக் கொண்டிருந்தபோது அவரின் மகனையும், பேரனையும் கருத்தில் கொண்டு அவர்கள் இருவரையும் அணுகி உள்ளனர். என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகனான பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் வேறு சில படத்தில் பிஸியாக இருப்பதால் தலைவி படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய பேரனான ஜூனியர் என்.டி.ஆர் இடம் கேட்டபோதும் அவரும் மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
Balakrishnagaru & Junior NTR
கால்ஷீட் பிரச்சினையாலும் மற்றும் தலைவி படத்தில் என்.டி.ராமராவ் இன் காட்சிகள் மூன்று அல்லது நான்கு மட்டுமே இருப்பதால் இருவரும் மறுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதனால் ஆந்திர முதல்அமைச்சரும், நடிகருமான என்.டி.ராமராவ் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.