மறைந்த நண்பரின் புதிய கிளினிக்- சந்தானம் மகிழ்ச்சி

மறைந்த நண்பரின் புதிய கிளினிக்- சந்தானம் மகிழ்ச்சி

கடந்த 2013ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் சந்தானத்துடன் இணைந்து காமெடியும் செய்திருந்தார்.

அடிப்படையில் தோல் மருத்துவ நிபுணரான டாக்டர் சேதுராமன் சென்னையில் ஜி கிளினிக் என்ற தோல் மருத்துவமனையை நடத்தி வந்தார். கடந்த 6மாதங்களுக்கு முன் திடீர் மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரின் நெருங்கிய நண்பர் சந்தானத்துக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது சேதுராமனின் பிறந்த நாள் வருகிறது அதையொட்டி அவரின் ஜி கிளினிக் பிராஞ்ச் சென்னை ஈசிஆர் சாலையில் திறக்கப்படுகிறது.

இதை சந்தானம் அறிவித்துள்ளார்.