Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

loakesh murukadas samuthrakan
cinema news Latest News Tamil Cinema News

இவங்களே எடுப்பாங்களாம்!…அவங்களே நடிப்பாங்களாம்…ரகுவரன் சொன்னதை செய்து காட்டிய இயக்குனர்கள்?…

கதை, திரைக்கதை, வசனம், காட்சியமைப்பு என அனைத்தும் சரியான அளவில் சேர்க்கப்பட்ட படங்களே மிகப்பெரிய வெற்றியை தேடி தந்திருக்கிறது. இது போன்ற படங்களுக்கு  மட்டுமே  ரசிகர்களிடம் வரவேற்பு அதிகமாக இருப்பதால்.

படம் இயக்குவதோடு நிறுத்தி கொள்ளாமல்,ஒரு காட்சியிலாவது தங்கள் முகத்தை காட்டி இருப்பார்கள் சில இயக்குனர்கள். கே.எஸ். ரவிக்குமார், விசு போன்றவர்கள் முந்தைய தலைமுறை படங்களில் செய்திருக்கின்றனர்.

வளர்ச்சி அதிகம் கண்டுள்ள இந்தக்கலாத்தின் இளைய தலைமுறை இயக்குனர்களில் சிலர் மட்டுமே இந்த யுக்தியை கையாண்டு வருகின்றனர். தங்களது படங்களில் ஒரு காட்சியிலாவது முகத்தை காட்டி படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் இளம் இயக்குனர்களும் இருக்கின்றனர். அட்லீ, விஜயை வைத்து தொடர்ச்சியாக படங்களை எடுத்து வந்தவர். அவர் இயக்கிய “பிகில்” படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் முகத்தைக் காட்டி மகிழ்வித்திருந்தார்.

வெற்றிப்படஇயக்குனர்கள் வரிசையில் முக்கிய இடத்தில் இருந்து வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா என பிரபலங்களை வைத்து இயக்கி முத்திரை பதித்தவர். “கத்தி” படத்தில் தனது தோளில் தண்ணீர் குடத்தை தூக்கி கொண்டும் வருவார் முருகதாஸ்.

pradeep
pradeep

‘ஜெயம்’ ரவி நடித்த “கோமாளி” திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரெங்கனாதன் ஆட்டோ டிரைவராக வந்திருப்பார், தனது மற்றொரு படமான “லவ் டுடே”வில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சசிகுமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற “நாடோடிகள்” படத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி என்ட்ரி கொடுத்திருப்பார் சமுத்திரக்கனி.

கமல்ஹாசன், விஜயை வைத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜும், தனது “மாஸ்டர்” படத்தில் வந்திருப்பார்.