cinema news
எம்.ஜி.ஆருக்கு அப்பறம் இவரு தாங்க…பெயரை எடுத்த அஜீத்!…உறுதிப்படுத்திய இயக்குனர்…
‘ஆசை நாயகன்’, ‘அல்டிமேட் ஸ்டார்’, ‘தல’ என பல பட்டங்களை பெற்று அஜீத் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். அவரின் வெற்றி படங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்தது “ரெட்”. இயக்குனர் ராம் சத்யா (எ) சிங்கம் புலி இயக்கியிருந்தார் படத்தை.
இயக்குனர் என்று சொல்வதை விட நடிகர் என்று சொன்னால் தான் சிங்கம் புலியை தெளிவாக அடையாளப்படுத்த முடியும். “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் காமெடியனாக இவர் செய்திருந்த நகைச்சுவை அதிகமாக ரசிக்கப்பட்டது.
இதே போலே நகைச்சுவை நடிப்பிற்கு பெயர் போன இவர் இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.
“ரெட்” என படத்தின் பெயர் வரக்காரணம் “இதயக்கனி” படத்தில் இரண்டாவது பாதியில் வரும் எம்.ஜி.ஆரின் பெயர் மிஸ்டர். “ரெட்”ஆம்.
இந்த பெயரை தான் தனது படத்திற்கு சூட்டியதாக “ரெட்” பட இயக்குனர் சொல்லியிருந்தார். படத்தின் டயலாக்கை வைத்து இந்த படம் தான் இது என எளிதாக அடையாளம் காணும் விதாமான வசனம் தேவைப்பட்டதாம்.
எல்லோரும் தினசரி பயன்படுத்தக்கூடிய வார்த்தையாக இருக்கக்கூடியது “அது”. ஒரு பொருளை அடையாளம் காட்ட அது வா?, அது தானே என்போம். இதனையே தனது படத்தில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்காவே வைக்க முடிவுசெய்தாராம். அதே போல “அது” என்ற இந்த வார்த்தையை அஜீத் படத்தில் அடிக்கடி பயன்படுத்தினாராம்.
கடைசியில் இயக்குனர் எதிர்பார்த்து போலவே இந்த வார்த்தை ஃபேமஸானதாம். அப்படியே “ரெட்” படம் என்றால் “அது” என்ற இந்த வார்த்தையும் தான் படம் பார்த்தவர்களின் மனதில் நிற்கக்கூடியதாக இருக்கும்.
படத்தின் பெயர் “ரெட்” என வைக்கப்பட்ட காரணத்தையும், “அது” என்ற வசனத்தின் பின்னனியையும் பற்றி சிங்கம் புலி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருந்தார்.