cinema news
காதலிக்காக ட்ரவுசருடன் வந்த சிவாஜி கணேசன்!…ஒரு வார்த்தை கூட மாறாமல் பேசி வியக்க வைத்த வல்லவர்…
செவாலியே சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு இவர் கிடைத்தது தமிழ் சினிமா ரசிகர்கள் செய்த பாக்கியம் என்றே தான் சொல்ல வேண்டும். அந்த அளவில் அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் விதமான நடிகர் என்று தான் சொல்லியாகவேண்டும்.
எந்த கதாப்பாத்திரத்தில் இவர் இதுவரை நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் சினிமாவை பற்றி எல்லம் தெரிந்து வைத்திருப்பவர்களால் கூட.
“அந்தமான் காதலி” படத்தின் படப்பிடிப்பிற்காக அந்தமானுக்கு சென்றதாம் படக்குழு. முக்தா சீனிவாசன் தான் படத்தின் இயக்குனர். சுஜாதா கதாநாயகி, சந்திர மோகன், ‘தேங்காய்’ சீனிவாசன் என பலரும் படத்தில் நடித்திருந்தனர். முக்தா ராமசாமி படத்தை தயாரித்திருந்தார்.
படத்திற்காக ஒரு முறை மேக்-அப் போடும் போது சிவாஜி டிரவுசர் மட்டுமே அனிந்திருந்தாராம். அந்த நேரத்தில் காட்சியில் அவர் பேச வேண்டிய வசனங்களை பற்றி சொல்லப்பட்டதாம்.
வசனகர்த்தாவோ, இயக்குனரோ மட்டும் தான் அவரிடம் வசனத்தை பற்றி சொல்வ வேண்டுமாம் அவரிடம் . அதே போல காட்சி ஷூட்டிங்கிற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை கேட்டாராம்.
அது எத்தனை பக்க வசனங்களாக இருந்தாலும் சரி இரண்டு முறை மட்டுமே கேட்டுவிட்டு அதை அப்படியே சொல்வாராம். ஒரு வார்த்தை கூட விடுபடாதாம்,அதே போல ஒரு வசனத்தை கூட மாத்தி சொல்லி விடமாட்டாராம்.
அந்த காட்சிக்கு ஏற்றவாரு வசனத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அதுவே அவரது தனித்துவம். தான் சிறு குழந்தையாக இருந்தபோது “அந்தமான் காதலி” படப்பிடிப்பில் இதை எல்லாம் பார்த்து வியந்ததாக மறைந்த இயக்குனர் முக்தா சீனிவாசனின் மகன் சுந்தர் சொல்லியிருந்தார்.