தேவயானிக்காகவே இயக்குனர் ஆனார் ராஜகுமாரன் என்று தான் சொல்லியாக வேண்டும். அந்த அளவுக்கு லவ்வி விட்டார் தேவயானியை. விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ராஜகுமாரன். “சூர்யவம்சம்” படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் உருவானது. அதன் பிறகு வந்த “நீ வருவாய் என” படத்தில் இருவரின் காதல் தீவிரமானது.
ராஜகுமாரன் இயக்கிய படங்கள் எல்லாத்திலேயுமே தேவயானி தான் ஹீரோயின். இப்போது இருவரும் வெற்றிகமான தம்பதியராக வாழ்ந்து வருகின்றார்கள். ராஜகுமாரன் இயக்கிய படங்களில் உருப்படியானது “நீ வருவாய் என” மட்டும் தான் சொல்ல முடியும். மீதி அத்தனை படங்களும் சொதப்பல் தான்.

அஜீத் – பார்த்திபன் என இரண்டு முன்னனி கதாநாயகர்கள் “நீ வருவாய் என”வில். அஜீத்துடன் பணிபுரிந்த அனுபவத்தை ராஜகுமாரன் சொல்லியிருந்த போது அவரின் திறமைகளை கண்டு தான் வியப்படைந்ததாக பேசியிருந்தார். ஒரே டேக்கில் காட்சியை முடித்து விட வேண்டும் என நினைப்பாராம் அஜீத்.
ஒன்-மோர் சொல்லிவிட்டால் அவ்வளவு கோபம் வந்து விடுமாம் அஜீத்துக்கு. அவர் நடித்த காட்சிகளை எடுக்கும் முன்னர் அதிகம் ஒத்திகை கூட பார்க்க மாட்டாராம். வசனத்தை கேட்பாராம், சீன் பற்றியும் தெரிந்து கொள்வாராம், அடுத்த நிமிடமே டேக் போலாமா என கேட்கக்கூடியவராம் அஜீத்.
இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தனது கதையை பற்றி அஜீத்திடம் பேசிகொண்டிருந்த போது கூட சிரித்துக்கொண்டே தான் அதனை கேட்டாராம். ப்ரேக் எடுத்து விட்டு கதையை சொல்லும் போது விட்ட இடத்திலிருந்து துவங்கச்சொன்னாராம்.
அவ்வளவு ஆர்வம் காட்டுனாராம் அஜீத் படத்தின் கதையை கேட்கும் போது. “நீ வருவாய் என” வெற்றிக்கு பிறகு அஜீத்தை வைத்து மீண்டும் இயக்க வந்த வாய்ப்பை ராஜகுமாரன் மறுத்துவிட்டார்.











