சிவகார்த்திககேயன் ராணுவ வீரராக இவர் நடித்து வரும் “அமரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் இப்படி இருக்க விஜயகாந்த், அஜீத், விஜய், ரஜினி , சூர்யா என தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களை வைத்து படங்கள் எடுத்து, அதில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
பாலிவுட்டிலும் படங்கள் எடுத்து வரும் இவர், அகில இந்திய அளவில் தனக்கென ஒரு புகழை பெற்று வருகிறார். சல்மான்கானுடன் இவர் கைகோர்த்து உள்ள படத்திற்கான பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
“சிக்கிந்தர்” என்கின்ற அந்த படத்தின் வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ சிவகார்த்திகேயனை வைத்தது முருகதாஸ் இயக்கி வரும் தமிழ் படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
முருகதாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை அவர் நடித்து வரும் மற்றொரு படமான “அமரன்” படத்தை விரைந்து முடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். முருகதாஸின் கவனத்திற்கு வந்த இந்த கோரிக்கையை கேட்டு தனது படத்தில் நடித்து முடித்த பிறகு தான் சிவகார்த்திகேயன் வேறு படங்களுக்கு செல்வார் என சொல்லிவிட்டாராம்.
“அமரன்” படப்பிடிப்பில் இருப்பது நாட்கள் மட்டும் தான் நடிக்க தேவைப்படுமாம். அனால் இந்த இடைவேளிக்குள் சிவகார்த்திகேயனின் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏதும் வந்து விட்டால் தனது படத்தின் கதாப்பாத்திரத்தை அது பாதிக்கும் என கூறி மறுப்பு தெரிவித்தாராம்.
மேலும் சிவகார்த்திகேயன் தனது படங்களில் இதுவரை பயன்படுத்தி வந்த ‘பாடி லாங்குவாஜ்’ முருகதாஸின் படங்களில் இருக்காதாம். இதனால் முருகதாஸ் பட கதாபாத்திரம் முந்தைய படங்களை விட சற்று வித்தியாசமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் , முருகதாஸிடம் உதவி இயக்குனராக பனியாற்றிய தேசிங்கு பெரியசாமியே “அமரன்” படத்தை இயக்கி வருகிறார்.