cinema news
சுனாமி வந்து சுருட்டீட்டு போயிருக்க கூடாதா?…அஜீத்தால அவ்வளவும் போச்சு!…ஆதங்கப்பட்ட இயக்குனர்…
மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்து வெளியான படம் “ரன்”, மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கு “ரன்”. அதற்கு அடுத்த படியாக மம்மூட்டி, முரளி, அப்பாஸ் நடித்த “ஆனந்தம்”. இப்படி தொடர் வெற்றிகளை குவித்து வந்து கொண்டிருந்தார் லிங்குசாமி.
அஜீத்தை வைத்து அவர் இயக்கிய படம் “ஜி”. திரிஷா, விஜயகுமார், வெங்கட்பிரபு என பலரும் இதில் நடித்திருந்தனர். கல்லூரி மாணவராக அஜீத் நடித்திருந்தார். இந்த வேஷத்திற்கும் அஜீத்துக்கும் சுத்தமாக பொருத்தமில்லை என படம் வெளியான நேரத்தில் பேசப்பட்டது.
கல்லூரியில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுவார் அஜீத். அதே நேரத்தில் ஸ்கூலில் படித்து வரும் பெண்ணான திரிஷாவையும் டாவடித்திருப்பார்.ஒரு கட்டத்தில் வில்லன் கோஷ்டியால் ஜெயிலுக்கு போய் விடுவார் அஜீத்.
ரீலீஸான பிறகு அப்பாவியான தன்னை சிறைக்கு செல்ல வைத்து பாடாய் படுத்திய வில்லனை எப்படி பழிவாங்குகிறார். தனது காதலி திரிஷாவோடு சேர்ந்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த லிங்குசாமிக்கு ஸ்பீட் ப்ரேக்கராக அமைந்தது “ஜி”. இதில் ஹீரோவாக நடிக்க இளம் நடிகர் ஒருவரை தான் தேடினாராம். ஹீரோ காலேஜ் ஸ்டூடென்ட் என்பதால். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக அஜீத்தை கமிட் செய்ய நேர்ந்ததாம்.
படத்தில் அஜீத் நடித்தது தனக்கு பிடிக்கவில்லை என ஒபனாக சொல்லியிருக்கிறார் லிங்குசாமி. எரிச்சலின் உச்சத்திற்கே போன அவர் படத்தின் ஃபிலிமை சுனாமி வந்து கொண்டு போயிருக்கக்கூடாதா? என நினைத்தாராம். அந்த அளவிற்கு படத்தின் ஹீரோ அஜீத் மீது வெறுப்பு இருந்ததாம்.