மூத்த சினிமா இயக்குனர் பாரதிராஜா தேனியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. நேற்று எண்ணிக்கை 4000 ஐ தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்குக் கொரோனா சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என வந்தபோதும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.