Latest News
அவரு பேர சொல்லாதீங்க…விஜய்சேதுபதிக்கு சைகை காட்டிய இயக்குனர்!…அப்படி என்ன தான் கடுப்போ?…
விஜய்சேதுபதி நடித்து வெளியான “மகாராஜா”படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. எதிர்பார்த்தை விட அதிக கலெக்சனை அள்ளிக்கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் ரேஞ்ச் கூடித்தான் இருக்கிறது. அடுத்தடுத்து தேடி வந்து புக் பண்ணும் புரொடியூஸர்கள் என மீண்டும் பயங்கர பிஸியாகி விட்டார் அவர்.
நல்ல ஹிட் கொடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது என மிகப்பெரிய வருத்தத்தில் இருந்து வந்தவருக்கு வரமாக அமைந்தது “மகாராஜா”.
படத்தின் இயக்கமும், விஜய்சேதுபதியின் நடிப்பும் அதிகமாக பேசப்பட்டது. படத்தின் விழா ஒன்று நடந்து வந்த நேரத்தில் ஒவ்வொருத்தராக வந்து படத்தையும், அதில் நடித்த நடிகர்கள் மற்ற கலைஞர்களை பற்றி பேசி வந்திருக்கின்றனர்.
விஜய்சேதுபதியும் அதே மாதிரி பட கலைஞர் குறித்து அவர்களின் பெயரை சொல்லி பேசி வந்திருக்கிறார். அப்போது இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான சிங்கம் புலியை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.
அப்போது மேடையில் இருந்த “மகாராஜா” இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் செய்கைகள் மூலம் விஜய்சேதுபதியிடம் சிங்கம் புலி பற்றி பேச வேண்டாம் என சொல்லியிருக்கிறார்.
ஆரம்பத்தில் சிங்கம் புலி படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது. விஜய்சேதுபதி பேசிய பின்னர் தான் அட அவரும் நடிச்சிருக்காறா படத்துலன்னு ஆச்சரியப்பட வைத்தது.
“மாயாண்டி குடும்பத்தார்” படத்திற்கு பிறகு சிங்கம்புலிக்கு ரசிகர்கூட்டம் பெருகியது. அதற்கு முன்னரே இவர் அஜீத் நடித்து சூப்பர்,ஹிட்டான “ரெட்” படத்தை இயக்கியிருந்தார். அதே மாதிரி சூர்யா, ஜோதிகா நடித்த “மாயாவி” படத்தை இயக்கியதும் இவரே. “மாயாவி” படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தும் நடித்திருந்தார்.