த்ரிஷ்யம் என்ற திரைப்படம் கடந்த 2013ல் வெளிவந்து பெரிய வெற்றியை ருசித்தது. மோகன்லால், மீனா நடித்த இந்த படம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாள வெற்றிக்கு பிறகு தமிழில் மட்டும் மலையாளத்தில் இயக்கிய அதே இயக்குனரான ஜீது ஜோசப்பே இப்படத்தை இயக்கி இருந்தார். பாபநாசம் என்ற பெயரில் தமிழில் வந்தது. இதெல்லாம் முடிந்த கதை இப்போ ப்ரெஷ்சா என்ன அப்டேட் என்று கேட்பவர்களுக்கு சொல்ற அப்டேட் என்னவென்றால், த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை த்ரிஷ்யம் 2 என்று இயக்குனர் ஜீது ஜோசப்பே மீண்டும் இயக்கி வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த மீனாவே இதிலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படம் கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து வருகிறது. கொரோனாவுக்கான உடல் சோதனைகள் , சமூக இடைவெளி, மாஸ்க் போன்ற விசயங்களில் உரிய கவனம் செலுத்தப்பட்டு திரைப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது.
இப்பட ஷூட்டின் மிகவும் விரைவாக ப்ரிஸ்க்காக அதிக சுறுசுறுப்புடன் நடந்து வருவதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.