தர்மபிரபு 2ம் பாகம் வருகிறதா

தர்மபிரபு 2ம் பாகம் வருகிறதா

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபு இவர் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப்படம் தர்மபிரபு. எமலோகத்தில் கதை நடப்பது போல்  உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் எமலோகம் சம்பந்தப்பட்ட பல கதைகள் வந்திருந்த போதிலும் தன் பங்குக்கு இதில் கொஞ்சம் அரசியலை கலந்து கதை செய்து வித்தியாசமான முறையில் இயக்கி இருந்தார் இயக்குனர் முத்துக்குமரன்.

எமன் வேடத்தில் யோகிபாபு இப்படத்தில் நடித்திருந்தார் . படம் பெரிய வெற்றி இல்லை சுமாரான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

இரண்டாம் பாக கதையை எழுதிய இயக்குனர் முத்துக்குமரன் அதை யோகிபாபுவிடம் சொல்லி இருக்கிறாராம். விரைவில் படம் இயக்க வாய்ப்பு வரும் என்கிறார் இயக்குனர் முத்துக்குமரன்.