Devi 2 - Official Teaser

Devi 2 | Official Teaser – தேவி 2 படம் டீசர் வெளியானது!

பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் பேய் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தேவி.தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் தேவி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.இதில் தமன்னாவுடன் இரண்டாவது ஹீரோயினாக நந்திதா நடித்துள்ளார்.அவர்களுடன் ஆர்.ஜே. பாலாஜி, யோகி பாபு மற்றும் கோவை சரளா காமெடி செய்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முதல் பாகம் மும்பையில் எடுத்திருந்த வகையில் இரண்டாம் பாகம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து படம் ஏப்ரல் 12 திரைக்கு வரவிருக்கிறது.இந்த படத்தில், இரு பேய்கள் உள்ளதாக தெரிகிறது.ரூபி பேயுடன் சேர்ந்து அலக்ஸ் என்னும் மற்றொரு பேய்யும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

Devi 2 | Official Teaser | Prabhu Deva, Tamannaah | Vijay | Sam C S