நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
விஜயின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தேவி. எனவே, அதன் அடுத்த பாகமாக தேவி 2 உருவாகியுள்ளது.
இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடித்ததால் பிரபுதேவா என்ன பாடுபடுகிறார் என்கிற காட்சிகள் இடம் பெற்றிருந்தது போல், இந்த பாகத்தில் பிரபுதேவா உடலில் பேய் புகுந்து விடுவதால் தமன்னா என்ன பாடுபடுகிறார் என்பதை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.