cinema news
பாட்டு தான் நமக்கு செட்டாகும்…ஃபைட் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது!…தனுஷை தள்ளிவைத்த தேவா?…
இசையமைப்பாளர் தேவா பல வெற்றி படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ரஜினிக்கு அவர் இசை அமைத்துக் கொடுத்த படங்கள் அனைத்தும் ஹிட்டே. கமல்ஹாசன் தேவா இணைந்தும் பணியாற்றி இருக்கிறார்
கானா பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை தேவாவையே சாரும். அவருடைய படங்கள் பலவற்றில் அவரது குரலிலேயே பாடல்களை பாடி இருப்பார். சத்யராஜ் நடித்த “அடிதடி” படத்தில் பாடல் ஒன்றை பாடும் காட்சியில் தேவா நடித்திருப்பார், ‘தகடுன்னா தமிழ்னாட்டுக்கே தெரியும், தலைவன் தங்க குணம்’ என்ற பாடல் தான் அது.
தனது படம் ஒன்றிற்கு வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருந்தாராம் தனுஷ். அப்போது தேவா இந்த வேடத்திற்கு சரி வருவார் என தோன்றியதாம். தேவாவை போனில் அழைத்து சார் என் படத்துல நீங்க தான் வில்லனா நடிக்கணும் என கேட்டும் விட்டாராம் தனுஷ்.
அதற்கு தேவாவோ நான் பாட வேண்டிய பாடல் வரிகளே எனது நினைவில் இருக்காது. எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி உண்டு. அதனால் உங்க படத்துல பேச வேண்டிய வசனங்களை மறந்திட கூடாது. அது நிறைய பேரோட நேரத்தை வீணடிக்கிற மாதிரி இருக்கும். அதனால நமக்கு பைட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது பாட்டு மட்டும் தான் செட் ஆகும்னு சொல்லி ஜகா வாங்கினாராம்.
வடசென்னையில் பேசப்படும் தமிழை நீங்க தெளிவாக பேசுவீங்க. அதனால தான் நான் உங்களை வைத்து படம் பண்ணலாம்னு எனக்கு ஒரு யோசனை வந்தது என சொல்லித்தான் அணுகினாராம் தனுஷ்