Latest News
வா வா என் தேவதையே… 6 வருடத்திற்கு பிறகு அம்மா அப்பாவான தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்…!
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா படுகோன் தற்போது கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பத்திலிருந்த தீபிகா படுகோனின் அண்மையில் போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள்.
அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் தீபிகா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கின்றது. இந்த அறிவிப்பை அவர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.