பிக்பாஸ் வீட்டில் ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் வேலை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். நேற்று சேரன் வெளியேறினார். எனவே, கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன், சாண்டி ஆகிய 5 பேரில் முகேனுடன் மோதப்போகிறார் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொருவருக்கும் யாரை நீங்கள் காப்பாற்றுவீர்கள்? என்கிற கேள்வி பிக்பாஸ் கேட்க, ஒவ்வொருவரும் பதில் கூறி வருகின்றனர். இந்த கேள்விக்கு பதிலளித்த தர்ஷன் ஷெரினை காப்பாற்ற விரும்புவதாக கூறுகிறார். அப்படி எனில் ஒரு மிளகாயை சாப்பிட வேண்டும் எனக் கூற அவரும் சாப்பிடுகிறது. அதேபோல், அடுத்து மற்றொரு மிளகாயை சாப்பிட்டுவிட்டு சாண்டியையும் காப்பாற்ற விரும்புவதாக அவர் கூறும் புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
#Day92 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BICPxH2gdH
— Vijay Television (@vijaytelevision) September 23, 2019