- Homepage
- cinema news
- கிரிக்கெட்ல மட்டும் இல்ல கில்லர் மில்லர் கிடையாது…இதை இனி சினிமாவுக்கும் சொல்லாலாம்…உலக தரத்தில் தனுஷ்!…
கிரிக்கெட்ல மட்டும் இல்ல கில்லர் மில்லர் கிடையாது…இதை இனி சினிமாவுக்கும் சொல்லாலாம்…உலக தரத்தில் தனுஷ்!…
தனுஷின் “ராயன்” படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ரீலீஸ் தேதி கூட நேற்று வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தனுஷின் 50 வது படம். அதோடு மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரும் அவரே.
எப்போதும் போல தனுஷின் குரலில் பாடல் ஒன்றின் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி விட்டது. இதானால் படத்தின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்ற தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்தடைந்திருக்கிறது. கடந்து முடிந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது “கேப்டன் மில்லர்”.
தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், “ஜெயிலர்” பட வில்லன் விநாயகன், நாசர், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
தனுஷின் இந்த “கேப்டன் மில்லர்” படம் 10வது லண்டன் தேசிய விருதிற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷின் படம் இப்போது லண்டன் விருதுக்கான பட்டியலிலும் சேர்ந்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று தான் இருந்திருக்கும் இந்நேரம்.
கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் டேவிட் மில்லரை கில்லர் மில்லர் என ரைமிங்காக அழைப்பார்கள். இனி தமிழ் சினிமாவில் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தையும் அப்படி அழைத்து விடுவார்கள் போலவே தான் தெரிகிறது.
பரிந்துரைக்க பட்டிருக்கும் “கேப்டன் மில்லர்” எப்படியாவது விருதினை பெற்று விட வேண்டும் என்பதுவும் இப்போது தனுஷ் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கும்.