- Homepage
- cinema news
- பவுன்சர்ஸ் பலத்தால் தயாரிப்பாளரை பதற வைத்த விஜய்சேதுபதி!…பயம் காட்டிய பவானி
பவுன்சர்ஸ் பலத்தால் தயாரிப்பாளரை பதற வைத்த விஜய்சேதுபதி!…பயம் காட்டிய பவானி
தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களை எல்லாம் உருக்கமாக “மகாராஜா” பட விழாவில் பேசிய விஜய்சேதுபதி மணிகண்டனை அரவணைத்திருப்பது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் கேரளத்தை சார்ந்த தயாரிப்பாளர் ஒருவரை விஜய் சேதுபதி அடியாட்கள் புடைசூழ அலைய வைத்தது ஏன் என்று தெரியவில்லை. அவரை பார்த்து விட்டு வெளியே வந்ததை தன்னால் மறக்கவே முடியாது.
கேரளாவில் விஜய் சேதுபதிக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி எனக்கு தெரியும். அப்படிப்பட்டவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என அந்த தயாரிப்பாளர் சொல்லியதை குறிப்பிட்டுள்ளார் பிரபல திரை விமர்சகர் ‘செய்யாறு’ பாலு. அதுசரி பெரிய இடம் என்றால் நாலும் இருக்கத்தான் செய்யும் என சொல்லி வருகிறார்களாம் சினிமா பிரியர்கள்.
“பாய்ஸ்” படத்தில் நடித்த சித்தார்த் இப்போது “இந்தியன் – 2″வில் நடித்திருக்கிறார். பரத் தமிழ் சினிமாவை விட்டு போகலாமா? இல்லை இருந்துவிடலாமா? என முடிவெடுக்க தயங்கி வருகிறார்.
காரணம் அவரது படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்காததால். நகுலை பற்றி கவலைப்பட வேண்டாம்.அவரை உயர்த்தி விட அவரது அக்கா தேவயானியும், மாமா இயக்குனர் ராஜகுமாரனும் பின்னனியில் இருக்கிறார்கள்.
தமன் தெலுங்கு சினிமாவில் இப்போது இசையமைப்பாளர். இப்படி “பாய்ஸ்”ல் நடித்திருந்த நடிகர்களின் வாழ்க்கை ஓரளவு ஒப்பேறி விட்டது என சொல்லலாம்.
இதில் மிகுந்த கவலைக்கிடமாக மாறியது மணிகண்டனின் வாழ்க்கை தான். தவறான சில பழக்கங்கள், தொடர் தோல்வி என தனது கேரியர் கெட்டு விட்டதாக தனது பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் அவர்.
தனது 50வது படமான “மகாராஜா”வில் மணிகண்டனை அழைத்து தன்னுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்து விட்டார் ‘மக்கள் செல்வர்’. இது மணிகண்டனுக்கு மறுஜென்மமே என “பாய்ஸ்’ படத்தில் அவரை ரசித்து பார்த்தவர்கள் இப்போது சொல்லிவரும் வார்த்தைகள்.