Latest News
விஜயை மதிக்காத ரஜினி?…கொளித்தி போட்ட புளு சட்டை மாறன்!..
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது பிறந்ததினத்தை கடந்த ஜூன் இருபத்தி இரண்டாம் தேத்ய் கொண்டாடினார், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வி.ஐ.பிக்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை குவித்திருந்தனர்.
விஜயும் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என தனது பதிவு போட்டாரு. “சூப்பர் ஸ்டார்” பட்டத்த வச்சி சில நாட்களுக்கு முன்னால மிகப்பெரிய போரே வெடிச்சிது.
ரஜினி ரசிகர்களும், விஜய் ஃபேன்ஸும் கடுமையாக மோதிக்கிட்டாங்க வார்த்தைகளால. நான் பாத்து வளர்ந்த பையன் விஜய்ன்னு ரஜினி சொல்ல, ஒரே சூப்பர் ஸ்டார் தான்னு விஜயும் சொல்லி முடிக்க, ஒரு வழியாக அந்த பிரச்சனை முடிந்து எல்லோரும் அவங்க, அவங்க வேலைகளை பார்க்கப்போயிட்டாங்க.
திரை விமர்சகர் புளூ சட்டை மாறன் இப்போ புதுசா ஒரு வெடிய கொளுத்தி போட்டு விட்டார். விஜய் பிறந்த நாளுக்கு ரஜினி ஏன் வாழ்த்து சொல்லலேன்னு கேட்டுட்டாரு. அப்பறம் என்ன நடக்கும் ‘பாகுபலி 2’தான் ரஜினி, விஜய் ஃபேன்ஸுக்குள்ள ஆரம்பிச்சிட்டுன்னு தான் சொல்லனும்.
அரசியலுக்கு வர தயங்கிய ரஜினியை மாதிரி இல்லாம எங்க அண்ணா சொன்ன மாதிரியே வந்துட்டாரு, அந்த காண்டுல தான் விஜய்க்கு ரஜினி பர்த்டே விஸ் பண்ணலேன்னு சொல்லி தளபதி ஃபேன்ஸ் ஆரம்பிச்சிட்டாங்க.
“16 வயதினிலே” படத்தில் ரஜினி தான் இருவருக்கிடையே பத்த வச்சு விடுவாரு. கவுண்டமணி பக்கத்துல இருந்துக்கிட்டு பரட்ட பத்த வச்சிட்டியேன்னு சொல்லுவாரு. ஆனா இங்க பரட்டைக்கே பத்த வச்சு விட்டுட்டாரு புளூ சட்டை மாறன்.