goat
goat

கோட் பட ரிலீஸ் தள்ளிப்போனதால் தயாரிப்பாளருக்கு நஷ்டமா?…கணித்து சொன்ன பிரபல விமர்சகர்!…

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது “கோட்”.  கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயிலும் உள்ளது. இந்த படத்தினுடைய சிங்கிள் வீடியோ  சமீபத்தில் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மன்ட் கல்பாத்தி அகோரம் தயாரித்து வருகிறார் “கோட்” டை..படம் துவங்கப்பட்ட போது, 2024 ஏப்ரல் 14 சித்திரை திருநாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்களாம் பட குழு.  ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களினால் படத்தினுடைய ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது.

இப்படி இருக்கையில் இது குறித்து பேசி உள்ள ‘வலைப்பேச்சு’ அந்தணன் இப்படி ரிலீஸ் தேதி தள்ளிப் போவதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகமுள்ளதாக சொல்லியிருக்கிறார்.

vijay68
vijay68

திட்டமிட்டு இருந்த தேதியில் இருந்து வெளியாகும் தேதியை வரை பார்த்தால் முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை கணக்கிட்டு பார்க்க நேரிடும், அப்படிப்பார்த்தால் அது லாபத்தில் நஷ்டத்தை கொடுக்கும் விதமாகத்தான் அமையும் என கணித்து சொல்லி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் விஜயின் பிறந்த தினத்தன்று “கோட்” படம் வெளிய ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்,  அதுவில்லாமல் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனால் அது தயாரிப்பாளரை நிச்சயம் யோசிக்காத்தான் வைக்கும் என்றும் அந்தணன் சொன்னார்.

வியாபார ரீதியாக விஜயின் முந்தைய படத்தை கோட் படத்தோடு ஒப்பீட்டு பார்த்துள்ள அந்தணன் “லியோ” படத்தின் வியாபாரத்தை விட “கோட்” பட வணிகம் குறைவாகத்தான் நடந்துள்ளது. ஆனாலும் விஜயிடைய அடுத்த படமான ’69’ல் நிச்சயமாக சம்பளத்தில் கணிசமாக ஒரு தொகையை உயர்த்தி விடுவார் விஜய் என சொல்லி இருக்கிறார்.