திரை உலகில் காதல் திருமணங்கள் நடப்பது எல்லாத்துறைகளையும் போல சகஜமாகத்தான் இருந்து வருகிறது. உயிருக்கு உயிராக காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. திருமணம் எப்படி நடக்கிறதோ அதே போல தான் விவாகரத்துக்களும்.
ராமராஜன் – நளினி, தனுஷ் – ஐஸ்வர்யா, எல்.விஜய் – அமலாபால், ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி என சொல்லிக்கொண்டே போகலாம். காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி. இந்த வரிசையில் இணையப்போகிறது இன்னொரு தம்பதி என சமீபத்தில் பேச்சுக்கள் இருந்து வருகிறது.

‘ஜெயம்’ பட வெற்றியை தொடர்ந்து இளம் கதாநாயகர்களில் முன்னனி இடத்தில் இருப்பவர் ‘ஜெயம்’ரவி. இவரது மனைவி ஆர்த்தி. இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள்.
இருவரும் டிவர்ஸ் செய்து கொள்ளப்போகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் தனது சமூக வலைதள பதிவுகளிலிருந்து ‘ஜெயம்’ரவியின் படங்களை நீக்கியுள்ளார். வந்தடைந்த செய்திகள் எல்லாம் வதந்தி தான் என நினைத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ப்ரொஃபைல் பிக்சரில் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியாக நிற்கும் படம் தான் இன்னும் இருந்து வருகிறது. டிபியில் ஃபோட்டோ இருக்கு, ஆனா அப்லோட்களில் இல்லை.
எஸ்.ஜே.சூர்யா படத்தில் பேசும் வசனம் போலதான் இருக்கு ஆனா இல்லன்னு சொல்லும் விதமாக ஜெயம் ரவியின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டிடுக்கிறார் அவரது மனைவி ஆர்த்தி. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்புகளை பெறவில்லை என்பதும் குறிப்படத்தக்கது.