க்ளைமாக்ஸ் நெருங்கி விட்டதா கலக்கும் மீம்ஸ்

க்ளைமாக்ஸ் நெருங்கி விட்டதா கலக்கும் மீம்ஸ்

இந்த வருடம் தொடங்கிய போது சில ஜோதிடர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆஹா ஓஹோவென்று இவ்வருடத்தை புகழ்ந்தது நினைவிருக்கலாம். திடீரென வந்த கொரோனா அதனால் ஏற்பட்ட ஊரடங்கால் பலர் வேலை வாய்ப்பை இழந்தனர்.

பல நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல்வாதிகளின் கொரோனா மரணங்கள் மக்களை பீதியடைய வைத்தது.

கொரோனா பாதித்து 10 மாதத்திற்கு பிறகும் இன்னும் நிலைமை சரியாகாமல் உள்ளது .இந்த வருடம்  வைத்து செய்து விட்டது என பலரும் புலம்பி வருகின்றனர். ராசியில்லாத வருடம் என இவ்வருடத்தை சொல்லி வருகின்றனர்.

இந்த வருடம் எப்போதுதான் கடந்து செல்லும் என பலரும் இவ்வருடத்தை கடக்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் நிவர் புயல் வேறு வந்து விட்டதால் படத்தோட க்ளைமாக்ஸ் போல இவ்வருடத்தின் க்ளைமாக்ஸ்க்கு வந்துவிட்டோம் மீம்ஸ்கள் மூல்ம் சமூகவலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.