cinema news
நிர்வாண புகைப்படத்தை கேட்ட ரசிகர் – சின்மயி அனுப்பியதை பாருங்கள்
மீ டூ விவகாரத்தில் வைரமுத்து, ராதாரவி என பலர் மீதும் புகார் கூறி தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி.
அவர் தொடர்ந்து தன் டிவிட்டர் பக்கத்தில் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக பிரச்சனைகள் குறித்தும் பதிவுகளை இட்டு வருகிறார்.
அவர் சமீபத்தில் நெட்டிசன்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், ஒரு வாசகர் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்க, அதற்கு கோபப்படமால் தற்போதைக்கு என்னிடம் இருக்கும் நிர்வாண புகைப்படம் இதுதான் எனக் கூறி அவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்குகளை புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் சரியான பதிலடி கொடுத்ததற்காக சின்மயியை பாராட்டி வருகின்றனர்.