Latest News
சின்மயீ ஆசைக்கு வேட்டு வைத்த வைரமுத்து!…பார்க்கவே பிடிக்காமலேயே போயிட்டாம்…
“கன்னத்தில் முத்தமிட்டால்”படத்தின் ‘நெஞ்சில்…கன்னத்தில்’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகத்தை பெற்றவர் சின்மயீ. தனது இளம் வயதிலேயே அதிகமான பாடல்களை பாடி அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் இவர்.
தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதுவதில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் வைரமுத்து. ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் என கோடம்பாக்கத்தின் டாப் ஹீரோக்கள் எல்லோருக்கும் பாடல்கள் எழுதி வருகிறார்.
இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்த பாடல்கள் காலம் கடந்தும் இன்று வரை பலரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
நாற்பது ஆண்டுகளை கடந்த சினிமா அனுபவத்தை கொண்டிருப்பவர் இவர். வைரமுத்து – சின்மயீ இருவரிடையே மிகப்பெரிய பனிப்போரே நடந்து வருகிறது சில காலமாக.
வைரமுத்துவை புகழும் விதமான செய்திகள் வந்தாலே எங்கிருந்தாலும் முதல் ஆளாக ஓடி வந்து தொடர்ந்து தனது எதிர்ப்பினை தெரிவித்து விடுவார் சின்மயீ.
வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பகிரங்கமாக தனது புகாரினை தொடுத்து அதிர்ச்சி கொடுத்தவர் சின்மயீ. மீடூவில் இது பற்றிய பதிவை செய்திருந்தார் இவர்.
விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான “மகாராஜா”ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தியேட்டர்களில். படத்தின் பாடல்களை வைரமுத்து தான் எழுதியுள்ளார்.பாடகி சின்மயீ “மகாராஜா” படத்தை பார்க்கவே இல்லையாம் இதுவரை.
அதற்கு காரணம் வைரமுத்துவே படத்தின் பாடலாசிரியர் என்பதனால் மட்டுமே தானாம். அதே போல “மகாராஜா” படத்தை தான் பார்க்கவே போவது இல்லை என சத்தியம் செய்யும் விதமாக சொல்லியிருக்கிறார் சின்மயீ.