cinema news
சும்மா இஷ்டத்து அடிச்சி விடாத…சுசித்ராவை பதம் பார்த்த சின்மயீ அம்மா பத்மாசினி…
சுசித்ரா தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நபரகாத்தான் இருப்பார் போல. திடீரென வெளிவந்த வீடியோவால் வெடித்தது சர்ச்சை. சுசித்ராவின் மனநலம் குறித்த சந்தேகம் வரை எடுத்து செல்லப்பட்டது பலராலும் இந்த விவகாரம். ஒரு வழியாக வீடியோ விஷயம் இப்போது மறக்கப்பட்டு விடப்பட்டது.
சுசித்ரா புகார் சொல்லியவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இப்போது முன்னனியில் இருப்பவர்கள் தான். அந்த லிஸ்டில் சின்மயீ பெயரும் இருந்தது. தேசிய விருது குறித்து பேச அழைத்து, பேச்சுவாக்கில் சின்மயீக்கு முத்தம் கொடுத்து, அதனால் பதறி அடித்து அந்த ரூமை விட்டே அலறி அடித்து ஓடிவந்ததாக சொல்லப்பட்டது. இப்படி வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பகீரங்கமாக புகார் சொல்லியிருந்தார் சின்மயீ.
சின்மயீ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் போது தான் அவருக்கும், சுசித்ராவிற்கும் நட்பு பிறந்ததாம். அதில் பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு எல்லாம் சின்மயீயை ரொம்ப பிடித்து போனதாம். இது சுசித்ராவிற்கு கடுப்பை தூண்டியதாம். பொறாமையின் உச்சத்திற்கே சென்று விட்டாராம் சுசித்ரா.
சுசித்ராவை விட 11 வயது இளையவராம் சின்மயீ. பிரபலங்களின் திறமையால் தான் அவர்களின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட முடியாது.
பொறாமை அதிகரித்ததால் தான் சின்மயீயின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து தனது இஷடத்திற்கு பேசி இருக்கிறார் சுசித்ரா.
தான் செய்த பாவங்களையெல்லாவற்றையும் போக்கி தனக்கு கடவுள் கொடுத்த பரிசு தான் தனது மகள் சின்மயீ. அவர் மீது சுசித்ரா சொன்ன பொய் புகார்களுக்காக சுசித்ரா வருந்துவார் என சின்மயீயின் அம்மா பத்மாசினி சொல்லியிருந்தார்.
சின்மயீ அபார்ஷன் செய்ததாக சுசித்ரா வீடியோவில் சொல்லியிருந்தது குறித்த கேள்விக்கும் காட்டமாக பதலளித்த போது தான் பத்மாசினி இதனை பேசியிருந்தார்.