cinema news
கார் பைக் இனி ஓட்டப்போவது இல்லை- யாஷிகா ஆனந்த்
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், இவர் கடந்த வருடம் ஈஸிஆர் சாலையில் நடந்த கார் விபத்தில் மாட்டி நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்தார்.
இதற்கிடையே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் யாஷிகாவின் என்ஃபீல்டு பைக் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த யாஷிகா, “அந்த பைக் வீட்டில்தான் இருக்கிறது. எனது அண்ணன் இப்போது அதை உபயோகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான தகவல்.. இனிமேல் நான் கார் மற்றும் பைக் ஓட்ட போவது இல்லை என்று முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.
அதற்கு ஏன் இந்த முடிவு என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த யாஷிகா, “என் தோழியை நாந்தான் கொன்றுவிட்டேன் என்று உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால்தான் இந்த முடிவு” என்று வருத்ததுடன் தெரிவித்தார்.