Connect with us

தளபதி 69 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன்… வெளியான சூப்பர் அப்டேட்…!

Latest News

தளபதி 69 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன்… வெளியான சூப்பர் அப்டேட்…!

தளபதி 69 திரைப்படத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கும் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். படம் செப்டம்பர் 5ஆம் தேதி உள்ளாகி ரசிகர்களையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. திரையரங்குகளில் மொத்தம் 25 நாட்கள் ஓடிய இந்த திரைப்படம் 420 கோடியை வசூல் செய்தது.

அடுத்ததாக நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்க இருக்கின்றது. மேலும் ஹச் வினோத் இப்படத்தை இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி இருந்தது. திரைப்படத்தில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்திய பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் பாபி தியோல் தமிழில் கங்குவா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இது விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் என்பதால் நடிகர் விஜய் வைத்து தயாரிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் பட பூஜை விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

More in Latest News

To Top