பல நாட்கள் காத்திருந்து இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் ஆகியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியது முதல் மோகன் வைத்தியா, வனிதா விஜயகுமார், சாக்ஷி, அபிராமி, தர்ஷன் உள்ளிட்ட பலரும் கேப்டன் ஆகினர். ஆனால், பலமுறை முயன்றும் சேரன் கேப்டன் ஆகவில்லை. கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் எலுமினேஷனில் பரிந்துரை செய்ய முடியாது.
இந்நிலையில், இந்த வாரம் சேரனை பிக்பாஸ் வீட்டின் தலைவராக பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது தொடர்பான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
#Day61 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/mMS8Nrg1L6
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019