விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்கிற பட்டியல் வெளியாகியுள்ளது.
1 ) டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி
2 ) நடிகை சாந்தினி
3) நடிகை கஸ்தூரி
4) நடிகை விசித்ரா
5) நடிகர் ராதாரவி
6) வி ஜே ரம்யா
7) நடிகை பூனம் பஜ்வா
8) நடிகர் ரமேஷ் திலக்
9) மாடல் பாலாஜி
10) நடிகர் பிரேம்ஜி
11) நடிகை மதுமிதா
12) நடிகர் ஸ்ரீமந்த்
13) நடிகர் சந்தானபாரதி
14) பாடகர் கிருஷ்
என மொத்தம் 14 பேர் இந்த முறை கலந்து கொள்ளப்போகிறார்கள் என செய்தி கசிந்துள்ளது. ஆனால், இதுபற்றி விஜய் தொலைக்காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.