seetha parthiban
seetha parthiban

ரெமோ டூ ஜென்டில்மேன்….புதிய பாதையில் பயணித்த புத்திசாலி பார்த்திபன்!…

நடிகர், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அவரின் “தாவனி கணவுகள்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்திருந்தார். பின்னர் அவரே இயக்குனராக மாறி தனது படங்களில் மட்டுமல்லாமல் மற்ற் இயக்குனரிகளின் படங்களிலும் கதா நாயகனாக நடித்தும் இருந்தவர்  பார்த்திபன்.

தனது “புதிய பாதை” படத்திற்காக விருதுகளை அள்ளிக்குவித்தவர். அதோடு மட்டுமில்லாமல் சினிமாவில் அவரது எதிர்காலத்தை தீர்மானித்தது “புதிய பாதை” படம். அதே போல அதில் நடித்த சீதாவை மணமுடித்தார். ஆனால எதிர்பாராத காரணங்களால் தோல்வியிலேயே முடித்தது இருவரின் மணவாழ்க்கை. ஆனாலும் இருவரும் திரையில் தங்களது பயணத்தை தொடந்து கொண்டே தான் வந்தார்கள்.

பார்த்திபன் இயக்கி நடித்த சில படங்கள் ஆரம்பகாலத்தில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்ளையே பெற்றுத்தந்தது. குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாது என சொல்லும் அளவிற்கு இரட்டை அர்த்த வசனகளும் அதோடு அதிக கவர்ச்சி காட்சிகள் என படம் பார்க்க போக வேண்டுமா? என யோசிக்க வைப்பது போலவே  இருந்ததாம். அதற்கு உதாராணாமாக அவரின் “உள்ளே வெளியே” படத்தை சொல்லலாம்.

ullae veliyae
ulle  veliye

ஆனால் பின்னாட்களில் அப்படியே யூ-டர்ன் அடித்து தரமான படங்கள் பார்த்திபன் படத்திற்கு செல்கிறேன் என பெற்றோரிடம் பிள்ளைகள் பெர்மிசன் கேட்டால் போய் வா என தயங்காமல் சொல்லும் விதமாகவே படங்களை கொடுத்து வந்தவர்.

சேரன் இயக்கத்தி இவர் நடித்திருந்த “வெற்றிக்கொடி கட்டு” படத்தை பார்த்தவ்ர்களுக்கு இவரின் மாற்றம் தெரிந்திருக்கும். சிறந்த கதாசிரியர், நல்ல வசனகர்த்தா அதோடு மட்டுமல்லாமல் நல்ல தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மாறுபட்ட கலைஞனாக இருந்து வருகிறார் சினிமா துறையில் இன்று வரை பார்த்திபன்.