Connect with us

பாரதிராஜாவை கவர்ந்த ரேவதியின் அந்த விஷயம்!…கடைசி வரை அப்படி மட்டும் நடிக்கவே இல்லையே…

revathi bharathiraja

cinema news

பாரதிராஜாவை கவர்ந்த ரேவதியின் அந்த விஷயம்!…கடைசி வரை அப்படி மட்டும் நடிக்கவே இல்லையே…

1980களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் ரேவதி. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர். தமிழ் படங்களில் தனது துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்திருப்பார்.

ரஜினி, கமல், பிரபு உட்பட எல்லொருடனும் நடித்திருந்தார் இவர். ரஜினியுடன் நடித்த “கை கொடுக்கும் கை” படத்தில் கண் பார்வை இழந்தவராக நடித்திருந்தார்.

கமலுடன் நடித்த “புன்னகை மன்னன்” படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எகிறியது தமிழ் சினிமாவில். தனது முதல் காதலியான ரேகாவை இழந்து சோகமாக இருக்கும் வரும் கமலுக்கு காதலியாக நடித்திருப்பார்.

kamal revathy pandiyan

kamal revathy pandiyan

இவரது முதல் படம் தமிழில் “மண்வாசனை”. நடிகர் பாண்டியனுக்கும் அது தான் முதல் படம். இதன் பிறகு “மண்வாசனை” பாண்டியன் என்றே அவர் அழைக்கப்பட்டார்.

கிராமத்து பின்னனியில் உருவானது  படம். முதல் படத்திலேயே அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே  நடித்திருப்பார் ரேவதி. படத்தில் நடித்த விதத்தால் அதிக பாராட்டினை பெற்ற இவரின் மற்றொரு திறமையை பார்த்து அசந்து போனாராம் “மண்வாசனை” படத்தின் இயக்குனர் பாரதிராஜா.

படம் முடிந்த பிறகு டப்பிங் பேசிய ரேவதி தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர் போலவே தமிழை உச்சரித்தாராம். மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டவர் ரேவதி. தமிழ் அதிகம் பேசத்தெரியாமல் தான் வந்தாராம் படத்தில் நடிக்க.

வேறு யாரையவது தான் படத்தில் ரேவதிக்காக டப்பிங்  பேச வைக்க நினைத்தார்களாம். ஆனால் தனது கடுமையான முயற்சியால் நன்றாக பேச கற்றுக்கொண்டாராம்.

ரேவதியின் இந்த ஆர்வத்தை பார்த்து அசந்து போனாராம் “மண்வாசனை” படத்தின் இயக்குனர் பாரதிராஜா. அதோடு தனது படங்களில் கவர்ச்சி காட்டி ரேவதி நடித்தது கிடையாது.

More in cinema news

To Top