cinema news
சொந்த பேட்டையில் ரஜினியுடன் man vs wild பியர் கிரில்ஸ் – வைரலாகும் வீடியோ
“மேன் வெர்சஸ் வைல்ட்” – டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்தநிகழ்ச்சி வனவிலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய சாகசம் நிறைந்த காட்டுப்பயணத்தை பற்றிய தொகுப்பு என்றே சொல்லலாம். இதனை பியர் கிரில்ஸ் பலலாண்டுகளாக தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்தநிகழ்ச்சியில் பலநாட்டை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியும் இதில் களம் இறங்கியுள்ளார்.
இதற்கான படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் சூப்பர் ஸ்டாரின் சொந்த ஊரான கர்நாடகம் மாநிலம் மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்புகள் இனிதே முடிந்த நிலையில் விரைவில் இந்தநிகழ்ச்சி டிஸ்கவரி தமிழ் சேனலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், பியர் கிரில்ஸ் தனது TWITTERலில் நிகழ்ச்சியின் ஃபர்ட் லுக் டீசர் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தொகுப்பில் சூப்பர் ஸ்டார் குழந்தைத்தனமான சுறுசுறுப்புடன் காட்சியளிக்கிறார். பொறுத்து இருந்து பார்ப்போம் SUPER STAR vs SUPER WILDயின் அட்டகாசமான சாகசங்களை.
Superstar @Rajinikanth’s relentless positivity and never giving up spirit was so visible in the wild as he embraced every challenge thrown at him. Respect! Watch Into The Wild with @BearGrylls on March 23 at 8:00 pm. @DiscoveryIN #ThalaivaOnDiscovery pic.twitter.com/s9PodYGv05
— Bear Grylls (@BearGrylls) March 9, 2020