Latest News
வடிவேல் கோபப்பட்டா நான் என்ன பண்ணுவேன்?…நான் வேற மாதிரி ஆளு…பயில்வான் கொடுத்த பகீர் ஸ்டேட்மென்ட்!…
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வில்லன்களின் அடியாட்கள் டீமில் டெரர் பீஸாக இருந்து நடித்தவர் பயில்வான் ரெங்கநாதன். காமெடி கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். அதில் கூட அக்சன் கலந்தே தான் இருந்தது. அடி,புடிகளை காமெடி சீன்களிலும் புகுத்தியவர் இவர். குணச்சித்திர வேஷங்களிலும் நடித்தவர். முன்பை போல இப்போதெல்லாம் திரையில் இவரை அதிகமாக பார்க்க முடிவதில்லை.
பத்திரிக்கையாளர் அனுபவமும் கொண்டிருப்பவர். இவரின் யூ-டியூப் சேனலில் எதாவது நியூஸ் வந்துவிட்டால் அதன் ரீச் வேற லெவலாக இருக்கும். நெகட்டிவ் கமென்ட்ஸ்கள் அதிகமாக வந்தாலும், பார்த்தவர்கள் தன்னை கழுவி, கழுவி ஊத்தினாலும் மனுஷன் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு என அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவார். இவரின் வீடியோக்கள் கான்ட்ராவர்ஸிகளுக்கு அதிகம் பெயர் போன வைகளாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து இவர் சொல்லும் தகவல்கள் சர்ச்சையாகிவிடுகிறது பல நேரங்களில்.
வடிவேல் குறித்து பேசும் போது இவர் சில சுவாரஸ்யமான தகவலை சொல்லியிருக்கிறார். வடிவேல் காமெடியனாக உச்சத்தில் இருந்த நேரத்தில் வாய்ப்பு கேட்டு பலரும் அவரை சந்தித்துள்ளார்கள். ஆனால் வாய்ப்பிற்காக வடிவேலுவை போய் பார்த்ததே கிடையாதாம் ரெங்கநாதன். வடிவேல் மட்டுமல்ல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜை தவிர வேறு யாரிடமும் வாய்ப்பு கேட்டு நின்றது தனது சினிமா சரித்திரத்தில் கிடையாது என சொல்லியிருந்தார்.
தன்னுடன் பழகிய போலீஸ்காரர்களும், பத்திரிக்கையாளர்களில் பலரும் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் தான் இன்னும் அதே உற்சாகம் குறையாமல் இருக்க காரணம் தனது உண்மையான உழைப்பும் அதில் கிடைத்த உயர்வும் தானாம்.