Latest News
மாமியர் கஸ்டடியில் ஜெயம் ரவி!…விவகாரத்து முடிவு?…பத்த வச்சி விட்டுட்டீங்களே பயில்வான்….
எடிட்டர் மோகன் பிறப்பால் இஸ்லாமியராம். காமெடி நடிகர் டனால் தங்கவேலு தான் இவரை இவருக்கு வாழ்வு கொடுத்திருக்கிறார். சொந்த ஊரில் பிழைக்க வழயில்லாமல் சென்னைக்கு படையெடுத்திருக்கிறார். தங்கவேலுவின் வீட்டில் தஞ்சம் புகுந்தவருக்கு மோகன் என பெயர் வைக்கப்பட்டதாம். இதை சொல்லியிருந்த ‘பயில்வான்’ ரெங்கநாதன் மேலும் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்
இவரது மகன்கள் ராஜா, ரவி. ராஜா இயக்குனராகி விட்டார். ரவி “ஜெயம்” படத்தில் நடித்து பிரபலமானதால் “ஜெயம்”ரவியாக மாறிவிட்டார். ஜெயம் ரவி, ஆர்த்தியை மணமுடித்தார். இவர்களது மகன் “டிக்-டாக்” படத்தில் நடித்திருக்கிறார். சில நாட்களாக ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வலம் வருகிறது.
இது குறித்து விளக்கம் சொல்லிய திரைவிமர்சகரும், நடிகருமான ‘பயில்வான்’ரெங்கநாதன். ஜெயம் ரவியிடம் படத்தில் நடிக்க கதை சொல்ல வரும் இயக்குனர்கள் அவரது மாமியாரை சுஜாதாவிடம் தான் சொல்ல வேண்டுமாம்.
அவர் ஓ.கே. சொன்னால் தான் அந்த கதை படமாகுமாம். ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் எந்த விதமான மனக்கசப்புகளும் கிடையாதாம்.
ரவியின் மாமியாரின் இந்த மாதிரியான செயல்கள் தான் ஜெயம் ரவியை வேதனையடைய செய்யுமாம். இந்த வெறுப்பு மட்டும் தான் அவருக்கு உண்டே தவிர தனது மனைவியுடனான உறவில் எந்த வித சஞ்சலங்களும் கிடையாது.
ரவி -ஆர்த்தி விவாகரத்து பற்றிய செய்தி முற்றிலுமாக வதந்திதானே தவிர அதில் துளி அளவம் உண்மை என்பது கிடையவே கிடையாது என உறுதியாக சொல்லி விட்டார் ‘பயில்வான்’ரெங்கநாதன்.
தனது யூ-டியூப் சேனலின் மூலம் சினிமா, நடிகர் – நடிகையர் பற்றிய செய்திகளை சொல்லி வருகிறார் இவர். இதனால் பல நேரத்தில் சர்ச்சைகள கிளம்பும்.